சேலம் ஜலகண்டாபுரத்தில் கறிக்கடை மேலாளரைத் தாக்கி 2 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த வடமாநில நபர்களை, சென்னைச் சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு போலீசார்த் துரத்தி பிடித்த சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
சேலம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த கறிக்கடை மேலாளர் பார்த்திபன். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் மற்றும் சமிர்க் குமார் ஆகிய இருவரும், பார்த்திபனைக் கத்தியால் தாக்கி, 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு, போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாகச் சென்னைக்கு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், ரயிலில் வந்திறங்கிய அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர்.
சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த தப்ப முயன்ற இருவரையும் ரயில்வே போலீசார்த் துரத்திப் பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.