சென்னைக் கோயம்பேடு மேம்பாலத்தில் மினி பேருந்து பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னைக் கோயம்பேட்டில் இருந்து மதுரவாயில் ஏரிக்கரை நோக்கி மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றபோது திடீரெனச் செல்ப் மோட்டார்ச் செயல்படாததால் பேருந்து நடுவழியில் நின்றது.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் மேம்பாலத்தில் மினி பேருந்து நின்றதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இது குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மினி பேருந்தைத் தள்ளியபோது அது மீண்டும் இயங்க தொடங்கியது. கோயம்பேடு மேம்பாலத்தில் திடீரென மினி பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.