புவிசார்க் குறியீடு பெற்ற விஜயபுரா பகுதி எலுமிச்சைப் பழங்கள் கர்நாடகாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு முதன் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் புவிசார்க் குறியீடு பெற்ற தயாரிப்புகள் உலகளவில் முத்திரையைப் பதித்து வருகின்றன. நறுமணம் மற்றும் தனித்துவமான சுவைக்குப் பெயர் பெற்ற விஜயபுரா பகுதி எலுமிச்சைப் பழங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
முதன் முறையாக 3 மெட்ரிக் டன் எலுமிச்சைப் பழங்களை ஏற்றுமதி செய்து சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனைக்கு உதவிய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தை மத்திய அமைச்சர்ப் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.
மேலும், இந்தியாவின் புவிசார்க் குறியீடு பெற்ற விவசாயப் பொருட்களுக்கு உலகச் சந்தைகளில் புதிய வழிகள் திறப்பதாகவும், விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும் பியூஸ் கோயல் தெரிவித்தார்.