இந்திய விமானப்படையில் மிக்-21 போர் விமானத்தின் சேவை அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அதில் விமானப்படைத் தளபதி ஏபி சிங் பயணித்தார்.
மிக்-21 போர் விமானம் என்பது சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட, உலகின் மிக அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் ஜெட் போர் விமானமாகும்.
சுமார் ஆறுபது ஆண்டுகளாக விமான போக்குவரத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்த இந்த விமானம், பல நாடுகளின் விமானப்படையிலும் சேவைப் புரிந்துள்ளது.
இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானமான இதன் சேவை அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் அந்த விமானத்தில் விமானப்படைத் தளபதி ஏபி சிங் பயணித்தார்.