சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள சம்பவம் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், பல்வேறு செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதைக் கணக்கு குழுவினர்க் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, முறைகேடு விவகாரத்தில் சிக்கிய 5 பேரில் கால்நடை மருத்துவக்கல்லூரி முதல்வர் உட்பட இருவர்ப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள மூவர்ப் பிற இடங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க 3 பேர்க் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த பல்கலைக்கழக நிர்வாகக்குழு, 15 நாட்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.