ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் மூதாட்டியின் நிலத்தை ஆக்கிரமித்த திமுகப் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வந்த சுலைஹா பீவி என்பவரது நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த திமுகப் பிரமுகர் முஸ்தகீர், முறைகேடாகத் தனது பெயருக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிலத்தைவிட்டு காலி செய்யுமாறு திமுகப் பிரமுகர் முஸ்தகீர் மிரட்டுவதாக மூதாட்டி சுலைஹா பீவியின் மகள் பாத்திமா பீவி குற்றம்சாட்டி உள்ளார்.
எனவே பட்டாவில் உள்ள திமுகப் பிரமுகரின் பெயரை நீக்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்.