லடாக்கின் டிராஸ் அருகே பிக் அப் வாகனம் ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அவ்வழியாக வந்த மத்திய அமைச்சர்க் கிரண் ரிஜிஜூ மற்றும் பாதுகாவலர்கள் ஆற்றில் விழுந்த வாகனத்தையும், அதிலிருந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.
நாடாளுமன்ற விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்க் கிரண் ரிஜிஜு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், லடாக்கின் டிராஸ் பகுதியில் கிரண் ரிஜிஜு தனது பாதுகாவலர்களுடன் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, முன்னால் சென்ற பிக் அப் வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது. அதிலிருந்தவர்கள் வாகனத்தின் மேலே நின்று உதவி கேட்டனர்.
இதைக் கண்ட மத்திய அமைச்சர்க் கிரண் ரிஜிஜூ, உடனே கீழே இறங்கிப் பாதுகாவலர்களுடன் இணைந்து உயிருக்குப் போராடிய இருவரைப் பாதுகாப்பாக மீட்டார். இதுதொடர்பாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.