உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?
Oct 21, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை : அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிப்பா?

Murugesan M by Murugesan M
Aug 26, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக டிஜிட்டல் சேவை வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு மேலும் புதிய வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதலாக அந்நாடுகளுக்கு, அமெரிக்கச் சிப் ஏற்றுமதிகுத் தடை விதிக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகப் பொருளாதாரம், டிஜிட்டல் மயமாகி வருவதால், டிஜிட்டல் பொருளாதாரத்தில் வரி விதிக்கும் வழிகளைக் கண்டறிய சர்வதேச நாடுகள் கடந்த 6 ஆண்டுகளாகவே திட்டமிட்டு வருகின்றன.

டிஜிட்டல் பொருளாதாரத்துக்கான நியாயமான மற்றும் விரிவான வரிவிதிப்பு கட்டமைப்பில் உலகளாவிய ஒப்பந்தம் இன்னும் ஏற்படாத நிலையில், அந்தந்த நாடுகள் தனித் தனியாக டிஜிட்டல் சேவை வரியை விதித்து வருகின்றன.

டிஜிட்டல் சேவை வரி (DST) என்பது அமேசான், மெட்டா, கூகிள் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் சேவைகளை வழங்கும் நாடுகளில் நேரடி இருப்பைக் கொண்டிருக்கவில்லை.

இதன் விளைவாக, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அந்தந்த நாடுகளின் அதிகார வரம்புகளில் வரி செலுத்துவதில் இருந்து தப்பித்து விடுகின்றன.

டிஜிட்டல் பொருளாதாரத்தின் அளவு அதிகரிப்பதுடன், இந்தத் துறைக்குச் சரியான முறையில் வரி விதிக்க இயலாமையும் சேர்ந்து, வளரும் நாடுகளுக்கான வருவாய் கண்ணுக்குத் தெரியாமல் சுரண்டப் படுகின்றன.

இந்தியாவில் மின்னணு சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி என்ற புதிய வரியை இந்தியா கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தியது.

அதன் மூலம், இந்தியாவில் பதிவு அலுவலகம் இல்லாமல், டிஜிட்டல் சேவை வழங்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு 2 சதவீத டிஜிட்டல் சேவை வரி அமலுக்கு வந்தது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த வரி விதிப்பில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவைப் போல் கனடா,பிரிட்டன்,இத்தாலி,ஸ்பெயின், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளும் டிஜிட்டல் வரி விதிப்பு முறையை அமல்படுத்தி உள்ளன.

இந்த டிஜிட்டல் வரி விதிப்பு முறைக்கு ஆரம்பம் முதலே அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. டிஜிட்டல் வரி விதித்த நாடுகள் மீது, அமெரிக்க வர்த்தகச் சட்டத்தின் கீழ் அமெரிக்கா விசாரணையைத் தொடங்கியது.

குறிப்பாக, இந்தியாவின் டிஜிட்டல் வரி, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எதிரானது என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

இந்தச் சுழலில், டிஜிட்டல் வரியை அறிமுகப்படுத்திய இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது வர்த்தக நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவெடுத்தது. குறிப்பாக இந்தியாவின் டிஜிட்டல் வரி விதிப்புக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கத் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா 2021ஆம் ஆண்டிலேயே அறிவித்தது.

கடந்த ஆண்டு, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கனடா அரசு 3 சதவீத டிஜிட்டல் வரியை நடைமுறைபடுத்தியது.

இதற்கிடையே, வர்த்தகப் பேச்சுவார்த்தையை ட்ரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வரியையும் கனடா அரசு ரத்து செய்தது. இதனால் நாடுகளுக்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் வரிகள் அனைத்தும் அமெரிக்காவுக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்றும், மறைமுகமாக அவைச் சீனாவுக்கு உதவுகின்றன என்றும் கூறியுள்ள ட்ரம்ப், டிஜிட்டல் வரியை நீக்காத நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Tags: Donald Trumptrump newsTrump warns countries around the world: Will he impose a digital services tax on American companies?உலக நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கைடிஜிட்டல் சேவை வரி விதிப்பா?டிஜிட்டல் சேவை வரிஉலகப் பொருளாதாரம்
Share
Tweet
SendShare
Previous Post

விடியா திமுக அரசு வீழ்ந்தால் மட்டுமே தமிழகத்தின் இருள் நீங்கும் : நயினார் நாகேந்திரன்

Next Post

ஓய்வுபெறும் MiG-21 போர் விமானம் : பிரியாவிடை கொடுத்த விமானப்படை தலைவர்!

Related News

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்!

இறுதிக்கட்டத்தில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – டிரம்ப் தகவல்!

காவலர் வீர வணக்க நாள் – காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!

சவாலான சூழல்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவலர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

பொள்ளாச்சி – வால்பாறை மலைச்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள 220 சிறப்பு முகாம்கள் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆய்வு!

நாட்டின் கவுரவத்தை கெடுப்பவர்கள் நாட்டின் எதிரிகள் – பிரதமர் மோடி

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies