போக்குவரத்தை எளிதாக மாற்றும் வகையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் போக்குவரத்தை அடியோடு மாற்றக்கூடிய புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கிறது பின்லாந்து. அது என்ன தற்போது பார்க்கலாம்.
என்ஜின் இல்லை…. சக்கரங்கள் இல்லை… இரைச்சலும் இல்லை… மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய க்கூடிய கார்கோ டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தைக் கண்டுபிடித்திருக்கிறது பின்லாந்து.
OULU நகரில் உலகின் முதல் superconducting vacuum tube system-ஐ வெற்றிகரமாகப் பரிசோதித்து பார்த்திருக்கின்றனர்ப் பின்லாந்து பொறியாளர்கள்… VTT தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட superconducting vacuum tube system சரக்குப் போக்குவரத்தை அடியோடு மாற்ற போகிறது.
மூடிய குழாய் அமைப்பிற்குள், எவ்வித என்ஜின்களோ, சக்கரங்களோ, தண்டவாளங்களோ இல்லாமல், விண்கலம் போன்ற அமைப்பான CAPSULES அசுர வேகத்தில் நகர முடியும் என்பதுதான் இந்த அசாத்திய கண்டுபிடிப்பின் அதிசயிக்க வைக்கும் திறன்.
10 கிலோ மீட்டர்ச் சோதனைப் பாதையில், 520 கிலோ மீட்டர் வேகத்தில் CAPSULE-கள் பயணித்த நிலையில், சோதனை வெற்றிப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை எளிதாக விரிவுபடுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது.
high-temperature superconductors என்ற தொழில்நுட்பத்தில் இந்த நவீன, எதிர்கால போக்குவரத்து அமைப்பானது உருவாக்கப்பட்டிருக்கிறது. குளிர்விக்கப்பட்ட, காந்த பாதைக்கு மேலே வைக்கப்படும்போது ஏற்படும் உந்துவிசையால், தொடுதலோ, உராய்வோ இல்லாமல் CAPSULES பயணிக்கும் என்றும், காற்றில் அழுத்தத்தைப் பயன்படுத்தி நிறுத்தவோ, இயக்கவோ முடியும் என்றும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தப் புதிய தொழில்நுட்பம், தற்போதுள்ள மின்சார ரயில்கள் அல்லது சரக்கு விமானங்களை விட 80% குறைவான ஆற்றலைப் பயன்படுத்துவது என்பது பலரையும் வியக்க வைக்கிறது. CAPSULES-களுக்குள், நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைப் பராமரிக்கும் வசதிகள் உள்ளதால், மருந்துப் பொருட்கள், மின்னணு பொருட்கள் அல்லது உணவுகள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல மிகவும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக, மின்கடத்திகள், காந்தங்கள், காற்று ஆகியவற்றை கொண்டே இயங்கும் பின்லாந்தின் தொழில்நுட்பம், வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், மாசு இல்லாத மற்றும் மிக விரைவான சரக்கு போக்குவரத்தைக் கொண்டு வரக்கூடும் துறைச் சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைதி, வேகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பம், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை அடியோடு மாற்றியமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.