விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர்க் கோயிலில் கடந்த 18ஆம் தேதி விநாயகர்ச் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் விநாயகர்ப் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்த நிலையில், கடந்த 23ஆம் தேதி கஜமுகச் சூரசம்காரம் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. 10ஆம் நாள் திருவிழாவான விநாயகர்ச் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்குக் கோயில் நடைத் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, விநாயகர்த் தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திரக்கரை அருகே நன்மைத் தரும் 108 விநாயகர்க் கோயிலில், ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயர சங்கடகரச் சதுர்த்தி விநாயகர்ச் சிலை உள்ளது.
விநாயகர்ச் சதுர்த்தியையொட்டி ஐந்து முகம் விளக்கு, லட்சுமி விளக்கு உட்பட ஆயிரத்து 8 விளக்குகளால் சங்கடகரச் சதுர்த்தி விநாயகர் அலங்கரிக்கப்பட்டுப் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல, கோயிலில் உள்ள 108 விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகர்ச் சிலைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகைத் திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ராஜகணபதிக்குத் தங்க கவசம் சாத்தப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர்ச் சதுர்த்தியையொட்டி ராஜகணபதி கோயிலில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் உள்ள மூலவர், தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விநாயகர்ச் சதுர்த்தியையொட்டி அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரைத் தரிசித்தனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.