சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை, துபாய், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம், அகமாதாபாத், லக்னோ ஆகிய விமான நிலையங்களில் ஸ்பீடுவிங் என்ற நிறுவனம் பயணிகளின் உடமைகளைப் பேக்கிங் செய்வது மற்றும் பயணிகளை உள்ளே அழைத்து வருவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் 3 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் போலி ரசீது மூலம் கணக்கு காட்டி வருவதாகவும், பயணிகளின் உடமைகளைத் திருடுவதாகவும் ஜிஎஸ்டி, வருமான வரித்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.
இதனடிப்படையில், ஒரே நேரத்தில் துபாய் உள்பட இந்தியா முழுவதும் உள்ள ஸ்பீடுவிங் அலுவலகத்தில் ஜிஎஸ்டி குழுவினர்ச் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஸ்பீடுவிங் நிறுவனத்தில் ஊழியர்களைத் தனிமைப்படுத்தி ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, பார்சல் செய்யும் இடங்களில் ஏராளமான போலி ரசீதுகள் மற்றும் 5 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.