தஞ்சையில் நிகழ்ந்த சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி படுகாயமடைந்து உயிரிழந்த காட்சி வெளியாகி உள்ளது.
பள்ளிஅக்ரஹாரத்தைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகி முருகேசன், கடந்த சில நாட்கள் முன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம், முருகேசன் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முருகேசன் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முருகேசன் உயிரிழந்தார்.