கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வீட்டிற்கு வழித் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையைப் பொதுமக்கள் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூளகிரி ரவுண்டானா அருகே குழந்தை ஒன்று தனியாக நின்று அழுதுகொண்டிருந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் குழந்தையைச் சமாதானம் செய்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர்க் குழந்தையை அழைத்துச் சிறிது தூரம் சென்றதும், அவரே வீட்டிற்கு வழிக் காட்டினார். அதன்படி சென்ற அவர்கள் குழந்தையை அவரது வீட்டில் பத்திரமாக ஒப்படைத்தனர்.