சட்டமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். பாடலைப் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, மதசார்பற்ற ஜனதா தளம் கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜேடிஎஸ், காங்கிரஸ் மேலிடத்திற்குப் பயந்தும், தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கேட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சட்டமன்றத்தில் ஒரு புலியாகவும், காங்கிரஸ் மேலிடத்தின் அதிகாரத்திற்கு முன் ஒரு எலியாகவும் டி.கே.சிவக்குமார் இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் விமர்சித்துள்ளது.