திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பள்ளி வகுப்பறையில் மதுபோதையில் உறங்கிய ஆசிரியரை, கல்வித்துறை அதிகாரிகள் தட்டி எழுப்பி விசாரணை நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
டி.ஆண்டிப்பட்டியில் உள்ள ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசியராகப் பணியாற்றி வரும் குமார், தினசரி மாணவர்களுக்குப் பாடம் எடுக்காமல் மதுபோதையில் வகுப்பறைக்கு வந்து உறங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவி உத்தரவிட்டார்.
விசாரணை நடந்து வரும் நிலையில் ஆசிரியர்க் குமார் மீது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.