பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்
Sep 7, 2026, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 02:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா ஒருபோதும் போரை விரும்பும் நாடாக இருந்ததில்லை என்றும், யாருக்கும் எதிராக இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதில்லை எனவும் கூறினார்.

யாராவது நமக்குச் சவால் விட்டால் நாம் வலிமையுடன் பதிலளிக்கப் பாதுகாப்புத் துறைத் தயாராக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

சைபர்ப் போர், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி தாக்குதல், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை எதிர்காலப் போர்களை வடிவமைப்பதாகக் கூறிய அவர், நவீனப் போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியில் மட்டுமின்றித் தற்போது விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸிலும் விரிவடைவதாகக் குறிப்பிட்டார்.

எதிர்காலப் போர்கள் வெறும் ஆயுதப் போர்களாக இருக்காது எனக்கூறிய அவர், அவைத் தொழில்நுட்பம், உளவுத்துறை, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தின் ஒருங்கிணைந்த விளையாட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி ஒரு சரியான எடுத்துக்காட்டு எனக் கூறிய அவர், உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் ஆயுத மேம்பாட்டின் வெற்றியை நிரூபிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஆப்ரேஷன் சிந்தூர் உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் தற்போது 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், இது வர்த்தகம் அல்லது உற்பத்தி பற்றியது மட்டுமல்ல, இது இந்தியாவின் மாறிவரும் உலகளாவிய அடையாளத்தின் சின்னம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: indian armyராஜ்நாத் சிங்பாதுகாப்புத்துறை அமைச்சர்The dream of self-sufficiency in defence has truly come true: Rajnath Singhபாதுகாப்புத்துறை
Share
Tweet
SendShare
Previous Post

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

Next Post

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies