பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் புகழ்பெற்ற மோனாலிசா, பாலிவுட்டைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் கால் பதித்துள்ளார். பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பாசி விற்று வந்த மோனலிசா அழகான சிரிப்பு, காந்த கண்களின் காரணமாக இணையத்தில் வைரலானார்.
கும்பமேளா கண்டெடுத்த பேரழகி என்றெல்லாம், நெட்டிசன்கள் வர்ணிக்க, ஒரே நாளில் மோனாலிசா நாடு முழுவதும் பிரபலமானார்.
ஆச்சரியங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை என்ற கூற்றுக்கேற்ப மோனாலிசாவுக்குப் பாலிவுட் வாய்ப்பு கிடைக்க அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், மலையாளத் திரையுலகிலும் மோனாலிசா கால் தடம் பதிக்க இருப்பது காந்த கண்ணழகியின் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது.
நாகம்மா எனப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்திற்கான பூஜை விழாவில் மோனாலிசா பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.