சைபர் தாக்குதல்களை முறியடிப்பதை ஆப்ரேஷன் சிந்தூர் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து இருப்பதை ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிரூபித்துள்ளது எனக் கூறினார்.
சைபர்த் தாக்குதல்களை தடுக்க உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்த ராஜ்நாத் சிங், இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள் வெற்றியை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்தது எனவும் கூறினார்.