கோவை ரத்தினபுரி சாலையில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட ஸ்ரீ செல்வ கணபதி விநாயகருக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் பத்து, இருபது, நூறு, ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் விநாயகரைச் சுற்றி அலங்காரம் செய்யப்பட்டன. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.