இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனைப் புரிந்துள்ளது.
ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் புவிவட்டப்பாதையில் செயற்கைகோள்கள் நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த பிஸ்சல் நிறுவனத்தின் செயற்கைகோளையும், ஐதராபாத்தைச் சேர்ந்த துருவா நிறுவனத்தின் செயற்கைகோளையும் விண்ணில் செலுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவி நாடப்பட்டது.
அதன்படி, தீ பிழம்புகளைக் கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த ஃபால்கான் 9 ராக்கெட், செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தின.
விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை மத்திய அரசு தொடர்ந்து ஊக்குவித்து வரும் நிலையில், இது மாபெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு செயற்கைகோள்களும் பூமியின் மேற்பரப்பை ஆராய்ந்து, காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை ஆகியவற்றைத் திறம்பட எதிர்கொள்ள உதவும் என நம்பப்படுகிறது.