கேரள மாநிலம் கொச்சியில் பாரில் ஏற்பட்ட தகராறு சர்ச்சையான நிலையில், நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக இருப்பது மலையாளத் திரையுலகில் பேசுபொருளாகி வருகிறது.
தமிழ், மலையாளத் திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன், ஐடி ஊழியரைத் தாக்கிய வழக்கில் தலைமறைவாகி இருக்கிறார்.
சுந்தரப் பாண்டியன், மஞ்சப்பைக் கடைசியாக சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த லட்சுமி மேனன் சமீப காலமாகச் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான பாருக்குத் தனது நண்பர்களுடன் சென்ற லட்சுமி மேனனுக்கும், ஐடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஐடி ஊழியர் காரில் ஏறி தப்பிக்க முயன்ற போது லட்சுமி மேனன் மற்றும் கேங் அந்த நபரைத் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், எர்ணாகுளம் காவல்நிலையத்திற்குச் சென்ற ஐடி ஊழியர், லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் தன்னைக் கடத்தி தாக்கியதாகப் புகாரளித்தார்.
ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனிஷ், சோனா மோல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
விசாரணைக்குப் பயந்து லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.