அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை டிஜிட்டல் வரி விதிப்பதை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்த்துள்ளார்.
கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விளம்பரம், தரவு விற்பனை, இடைத்தரகச் சேவைகள் மூலம் வருவாய் ஈட்டுகின்றன.
இந்த வருவாய்க்குப் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை, டிஜிட்டல் சேவை வரி என்ற பெயரில் 2 முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கின்றன.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டிஜிட்டல் வரி பாகுபாட்டை நீக்காவிட்டால் அந்நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும், உலுக்கிப் பணமெடுக்க, அமெரிக்காவும், அமெரிக்க டெக் நிறுவனங்களும் உலகின் உண்டியல் இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.