ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில், இந்தியாவை மட்டும் டிரம்ப் குறிவைப்பது நியாயமில்லை..? என அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கான நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் மற்ற நாடுகளைக் கண்டுகொள்ளாமல், இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவை விட ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு, ட்ரம்ப் கடுமையான வரி விதிக்காமல் உள்ளதையும் சுட்டி காட்டியுள்ளது.
50 சதவீத வரி விதிப்பு அமெரிக்கர்களைப் புண்படுத்தியுள்ளது என்றும், இது இந்தியா – அமெரிக்க உறவுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் எனவும் அமெரிக்க வெளியுறவு கொள்கைக்கான நிலைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, அமெரிக்காவின் வரி கட்டண அட்டவணையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்றும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.