கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் புஷ்பா 2 பட காட்சிகளின் அடிப்படையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டையில் ஆண்டுந்தோறும் ஸ்ரீராஜ மார்த்தாண்ட பக்த மண்டலி அமைப்பின் சார்பில் விநாயகர் சிலைகள் பிரம்மாண்டமாக அமைத்து வழிபடுவது வழக்கம்.
குறிப்பாக இந்தப் பகுதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகள் பேசும் மக்கள் வசிப்பதால் திரைப்பட காட்சிகளை நினைவு கூர்ந்து தத்ரூபமாக அமைக்கும் விதமாக விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகிறது.
இந்தாண்டு புஷ்பா 2 படத்தில் வரும் செம்மரம் தொடர்பான காட்சி நுழைவாயிலில்
அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிளைமாக்ஸ் கட்சியில் வரும் அல்லு அர்ஜுன் அமர்ந்தபடி கையை அசைப்பது போலவும், அதன் பின்னணியில், ஹெலிகாப்டர் வருவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.