தென்னை விவசாயிகளுக்கு வழங்குவது போன்று தங்களுக்கும் “100 நாள் வேலை மானியம்” வழங்க வேண்டும் என நெல் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஆனைமலைப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஆனால், ஆட்கள் பற்றாக்குறை, போதிய வருவாய் இல்லாமை உள்ளிட்ட காரணத்தால் பெரும்பாலானோர் தென்னை சாகுபடிக்கு மாறிவருகின்றனர்.
மேலும், போதிய பாதுகாப்பு கிடங்கு இல்லாததாலும் நெல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, உரம் இடுவது, அறுவடைச் செய்வது போன்ற பணிகளுக்கு 100 நாள் வேலைப் பணியாளர்களை மானியத்துடன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.