சேலம் கருப்பூர் அருகே உள்ள வட்டக்காட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடிகர் சேலம் சரவணனின் ஸ்டுடியோவை நடிகர்ச் சேதுபதி, இயக்குநர் பாண்டியராஜ் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
திரைப்பட நடிகர் சேலம் சரவணன் தாம் பிறந்த சொந்த ஊரான சேலம் மாவட்டம் வடக்காடு பகுதியில் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்ற பெயரில் படப்பிடிப்பு தளத்தைக் கட்டி இருக்கிறார். நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டியராஜ் கலந்துகொண்டு ஸ்டுடியோவினைத் திறந்து வைத்தனர்.
அதன் பின்னர்ச் செய்தியாளர்களுக்கு விஜய் சேதுபதி, இயக்குனர் பாண்டியராஜ் கூட்டாகப் பேட்டியளித்தனர்.
அப்போது சேலம் மாடர்ன் தியேட்டருக்குப் பிறகு சேலம் சரவணன் ஸ்டுடியோ, மிகப்பிரமாண்டமாக இருக்கிறது, ஆரம்பக் காலத்தில் சினிமாத் துறைச் சேலத்தில் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.