சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் ஜகல்பூரில் 15 வருடங்களுக்கு முன்பு குடியேறி சிவில் இன்ஜினியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் அங்கேயே வசித்து வந்த அவர், திருப்பதி கோயிலுக்குச் செல்ல குடும்பத்தினர் அழைத்ததால் சொந்து ஊருக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் புறப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் பெய்த கனமழைக் காணமாக சுக்மா பகுதியில் உள்ள கால்வாயைக் கடக்கும்போது ராஜேஷ்குமார்ச் சென்ற கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதில், காரில் பயணித்த ராஜேஷ்குமார், அவரது மனைவி பவித்ரா மற்றும் மகள்கள் சௌத்தியா, சௌமிகா ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
4 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு சொந்த ஊருக்கு எடுத்துவரப்படவுள்ள நிலையில், பாரண்டப்பள்ளி வசிக்கும் உறவினர்கள் கதறி அழுதனர்.