மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் எல்லையில் 4 நக்சல்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மகாராஷ்டிராவின் கோபார்ஷி வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்குப் பாதுகாப்பு படையினர் பதிலடி அளித்தனர்.
சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்தச் சண்டையில் 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களது துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.