சிவகங்கை அருகே சாலை விபத்தில் மாணவன் உயிரிழந்த நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை இந்திராநகர் பகுதியை சேர்ந்த பரத், அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு லேப் டெக்னீசியன் படிப்பைப் பயின்று வந்தார்.
இந்நிலையில் பரத் தனது நண்பர் ராஜேஸ் கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த ராஜேஸ், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பரத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற போலீசார், அவர்களை அப்பறப்படுத்த முயன்றதால் இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.