தேனியில் 6 மணி நேரம் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் வராகநதி ஆற்றில் கரைக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலும் 50க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு விநாயகர்ச் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்று வைக்கப்பட்டிருந்த விநாயகர்ச் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பொது இடங்களில் வைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விநாயகர்ச் சிலைகள் பெரியகுளம் வடகரைப் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், பெரியகுளத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராக நதி ஆற்றில் விநாயகர்ச் சிலைகள் கரைக்கப்பட்டன.
6 மணி நேரமாகச் சென்ற விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.