இறை பக்தி மனிதனை ஒழுங்குபடுத்தும் ஒரு அரிய சக்தி என மகாராஷ்டிர மாநில ஆளுநரும், குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு வேதப் பண்டிதர்கள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி ஆசி வழங்கினர்.
பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த இரண்டு நாட்களாக ஏழுமலையானைச் சிறப்பாக வழிபட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், விரைவில் இந்தியா உலகின் நம்பர் ஒன் நாடாக மாறும் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் கூறினார்.