ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயிற்சி அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்-இ-முகமது பயங்கரவாத அமைப்பானது பல நாச வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புக்குப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பல்வேறு உதவிகளைச் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆண்டுக்கு 80 முதல் 90 கோடி ரூபாய் நன்கொடைப் பெறுவதாகவும், இதை வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிதியில் 50 சதவீதத்தை ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஆயுதங்களை வாங்க செலவிடுகிறது.
தற்போது பழைய ஆயுதங்களை மட்டும் வைத்துள்ள அந்த அமைப்பிற்கு அதிநவீனக் குவாட்காப்டர், ட்ரோன்களை வாங்க ஐஎஸ்ஐ நிதி உதவி அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவிற்கு எதிராக, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.