தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே நெய் உற்பத்தி கடையில் பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது.
ஹைதராபாத் அடுத்த அமீர்பேட்டையில் பிரபல நெய் உற்பத்தி செய்யும் கடை உள்ளது.
இந்தக் கடையில் திடீரென பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாகக் காணப்பட்டது.