பீகாரில் பள்ளி கழிவறையில் தீயில் எரிந்து 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகாரின் கர்தானிபாக் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் கழிவறைக்குள் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைக் கண்டித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோர், உறவினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டயர்களைக் கொளுத்தி போராட்டம் நடத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.