ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான லப்பர் பந்து திரைப்படம் பெரும் வெற்றிப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் டீசல் எனும் படத்தில் நடித்துள்ளார்.
ஆக்ஷன், திரில்லர் கதையாக உருவான இப்படத்தைச் சண்முகம் முத்துச்சாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் அதுல்யா நாயகியாகவும், நடிகர்கள் வினய், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இதனிடையே டீசல் படத்தின் டீசர் வெளியான நிலையில், ஹரிஷ் கல்யாணின் வசனம் மற்றும் ஆக்ஷன் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.