இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எனச் சீன ராணுவ நிபுணர் வாங் யானன் தெரிவித்துள்ளார்.
DRDO வால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பான IADWS-ன் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
ஒடிசா கடற்கரையில் நடந்த இந்தச் சோதனை, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு ஒரு புதிய வலிமையையும், தன்னம்பிக்கையையும் அளிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய சீன ராணுவ நிபுணர் வாங் யானன், இந்தியாவின் இந்த உயர்ச் சக்தி லேசர் ஆயுத அமைப்பு, ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே போர்த் தொடர்பான லேசர் அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். இது ஒளி வேக ஈடுபாடு, துல்லியமான மற்றும் அதிகச் செயல்திறனை கொண்டுள்ளதாகவும் வாங் யுனான் தெரிவித்தார்.