இந்திய வர்த்தகர்களுக்காக நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம் இது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மையில் வர்த்தகத்திற்காகவோ, உக்ரைன் தொடர்பாகவோ அமெரிக்கா 50 சதவீத வரியை விதிக்கவில்லை எனவும், நமது உறுதியைக் குலைக்கும் நோக்கத்தில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
உலக அரசியல் விளையாட்டுகளின் பாதிப்பை இந்திய தொழிற்துறையினர் சுமக்கக் கூடாது எனக் கூறிய கமல்ஹாசன்,
இந்தியர்களின் வாழ்வாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது, கருத்துவேறுபாடுகளை மறந்து முழு தேசமும் ஒன்றாகச் செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட தொழிற்துறையினருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனக் கமல்ஹசான் வலியுறுத்தி உள்ளார்.