மும்பையில் இந்து நண்பர்களுடன் பழகிய இஸ்லாமிய பெண்ணை, மற்றொரு இஸ்லாமிய பெண் கடுமையாகத் திட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.
மும்பையில் இஸ்லாமிய பெண் ஒருவர், நண்பர்களுடன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அதனைக் கண்ட அதே மதத்தைச் சேர்ந்த மற்றொரு பெண், இஸ்லாமிய சமூகத்தையும், புர்காவையும் அந்த இளம்பெண் அவமதிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், கடுமையான வர்த்தைகளால் திட்ட தொடங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தகராறில் ஈடுபட்ட பெண்ணுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.