மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நான்குவழி சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.
ஆணைக்காரன் பகுதியைச் சேர்ந்த முகமது அசார் என்பவர்க் கொள்ளிடம் 4 வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தை வீலிங் செய்து வீடியோக்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து, ஆணைக்காரன் சத்திரம் காவல் நிலைய போலீசார் முகமது அசார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மேலும், அவரின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.