கூலி திரைப்படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க கோரிய மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தைப் பார்க்க 18 வயதுக்குக் கீழானவர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவதில்லை.
இதனால் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க சென்சார்போர்டுக்கு உத்தரவிட கோரி சன் பிக்சர் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தமிழ்ச் செல்வி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிக அளவிலான சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் மற்றும் மோசமான வார்த்தைகள் உள்ளதால், குழந்தைகள் அப்படத்தைப் பார்ப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, சன் பிக்சர்ஸ் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.