இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களைப் போலீசார் மற்றும் மீட்பு படையினர்ப் பத்திரமாக மீட்டனர்.
இமாச்சல பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணாலியின் டோபி என்ற கிராமத்தில் உள்ள திபெத்திய காலனிக்குள் பியாஸ் ஆற்றின் வெள்ளநீர்ப் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
தகவல் அறிந்து மீட்பு படையினருடன் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கிருந்தவர்களைப் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.