அமெரிக்க வரிவிதிப்பு காரணமாகத் திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் ஆடைகளில் அமெரிக்க வர்த்தகர்கள் 30 சதவீதம் தள்ளுபடி கோருவதாக ஏற்றுமதியாளர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக அமெரிக்காவிற்குப் பனியன் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆடைகளுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டுத் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு காரணமாக, ஏற்றுமதியாகும் ஆடைகளின் மீது 30 சதவீதம் வரை வர்த்தகர்கள் தள்ளுபடி கோருவதாகவும், இதனால் ஏற்படும் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் 25 சதவீதத் தள்ளுபடி விலையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், குறைந்த அளவு ஆர்டர்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.