இமாச்சல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த 400க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைத் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா பகுதியில் பாங் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஆர்னி பல்கலைக்கழகத்தில் வெள்ள நீர் புகுந்ததால் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மாணவ, மாணவிகளைப் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.