இலங்கை செம்மணி பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கட்டுமான பணியின்போது மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் அகழாய்வு தொடங்கியது. இந்த நிலையில், 2-ம் கட்டமாக நடைபெற்ற அகழாய்வு பணியின்போது 169 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 169 எலும்பு கூடுகளில், 158 எலும்புக் கூடுகள் முழுமையாக அழிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.