கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழைப் பெய்ததால், படகு இல்லத்தில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாகக் குடைகளை பிடித்தபடியே பயணம் செய்தனர்.
சாரல் மழையின் காரணமாகக் குளிரும் கட்டுக்குள் இருந்ததால், இதமான சூழலை அனுபவித்தபடியே சுற்றுலா பயணிகள் பொழுதைக் கழித்தனர்.
இதேபோல் மற்றொரு மலைவாசஸ்தலமான ஏற்காட்டில் கடுமையான பனி மூட்டம் நிலவியது.
எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்குப் பனிமூட்டம் கடுமையாக இருந்ததால், பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே வாகன ஓட்டிகள் பயணித்தனர்.
அமெரிக்காவின் வட கரோலினா கடற்பகுதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய ரக விமானத்தின் விமானியை கடலோரக் காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.