திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சாலையில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுவனைத் தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்த காட்சி வெளியாகி உள்ளது.
வீரவநல்லூர்ப் புதுமனை பகுதியை சேர்ந்த ஜோச செல்லத்துரை என்பவரது 5 வயது மகன் ஜெரோம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் சிறுவனைத் துரத்தி சென்று கடித்துள்ளன. இதில் லேசான காயமடைந்த சிறுவன் ஜெரோமுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களைப் பேரூராட்சி நிர்வாகம் பிடித்து செல்ல வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.