உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனைப் பி.வி.சிந்து முன்னேறி உள்ளார்.
பாரிஸில் நடைபெறும் உலகப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் 2வது நிலை வீராங்கனையான சீனாவின் ஷி யி வாங்கை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஷி யி வாங்கை 21-19, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.