அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு கார்லோஸ் அல்காரஸ், ஜான் லெனார்ட் ஆகியோர் முன்னேறினர்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியா பெலூசியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-1, 6-0, 6-3 என்ற செட்கணக்கில் அல்காரஸ் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் ஜான் லெனார்ட் ஸ்ட்ரஃப் உடன் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே மோதினார். இதில் 2-6, 6-3, 4-6 7-5 என்ற செட்கணக்கில் ஸ்ட்ரஃப் வெற்றிப் பெற்றார்.