“லவ் மேரேஜ்” படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வெளியான ‘லவ் மேரேஜ்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படம் இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
இதனால் திரைப்படம் இந்தியாவிலும் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாளை ப்ரைம் வீடியோவில் லவ் மேரேஜ் திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.