டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இரண்டாம் இடம் பிடித்தார்.
டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்றுச் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர்த் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
போட்டியில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். அதேபோல் டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 3 ஆவது இடம் பிடித்தார்.